கற்பிட்டி அல் அக்ஸாவின் இரட்டை சகோதரிகள் அரச வங்கி பயிலுணர் ஊழியராக நியமனம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் , புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
அண்மையில் வெளியான கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் வணிகப் பிரிவில் சிறந்த பெறுபேற்றுடன் பல்கலைக்கழகத் தகுதி பெற்ற இரட்டை சகோதரிகளான எம்.வினோஷா கற்பிட்டி இலங்கை வங்கி கிளையிலும், எம் ஷர்மி கற்பிட்டி பிரதேச அபிவிருத்தி வங்கி கிளையிலும் தமது சேவைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் கற்பிட்டி ரோமன் கத்தோலிக்க அரசினர் பாடசாலையின் பழைய மாணவிகள் என்பதுடன் கற்பிட்டி அல் அக்ஸாவின் உள்ளக கற்கை நெறியில் முதன் முறையாக நூறு வீத சித்தி பெற்ற மாணவிகள் என்பதுடன் முரளிதரன் மகேஸ்வரி தம்பதிகளின் புதல்விகளாகும்.
No comments