வளப்பற்றாக்குறையோடு சாதனை புரிந்து வரும் புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் முஸ்லிம் மகா வித்தியாலயம்.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன்)
பாடசாலைகளுக்கிடையிலான வடமேல் மாகாண கால்ப்பந்தாட்ட போட்டிகளின் இரு பிரிவுகளில் புத்தளம் வெட்டாளை அசன் குத்தூஸ் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதுவரை காலமும் சீரான மைதானமோ, கோல் கம்பங்களோ இன்றி வெறுமனே ஒரேயொரு உதைப்பந்தை மாத்திரமே வைத்துக்கொண்டு பயிற்சிகளில் ஈடுபட்டு இந்த அடைவினை இம்மாணவர்கள் அடைந்துள்ளனர்.
இந்நிலைமையினை புரிந்து கொண்ட பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் அவர்களாகவே முடியுமான பணத்தின் மூலம் மாணவர்கள் இரு பந்துகளும், ஆசிரியர்கள் சேர்ந்து இரு பந்துகளும் பெற்று அண்மையில் பாடசாலையின் காலைக்கூட்டத்தில் போது பிரதி அதிபர் எம்.எஸ்.எம்.மொஹிதீனிடம் அவைகளை கையளித்தனர்.
வீரர்களுக்கான மேலங்கிகள், இரு கோல் கம்பங்கள், பந்துகள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள தனவந்தர் கள் முன்வரவேண்டும் என பாடசாலை அதிபர் ஜே.எம்.இல்ஹாம், பயிற்றுவிப்பாளர் எச்.என்.அம்லக் முஹம்மது ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments