புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி இப்ரா கணிதப் போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவு
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
புத்தளம் வலய மட்டத்தில் இடம் பெற்ற கணிதப் போட்டியில் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 06 ல் கல்வி பயிலும் மாணவி எம்.ஐ.எப் இப்ரா வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இப்ரா பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.இவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பாடசாயின் அதிபர் பீ.எம் முஸ்னி மற்றும் பிரதி அதிபர் ஐ.என்.எம்.எம். லாஹீர் ஆகியோர் பாடசாலை நிர்வாகம் சார்பாக தெரிவித்துள்ளனர்.
அத்தோடு மாகாண மட்ட கணிதப் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03 ம் திகதி குருநாகலில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments