Breaking News

மதுரங்குளி ஜும்மா பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த ஆளுநர் நஸீர் அஹமட்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்,  புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்ட வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமடிடம் விசேட வேண்டுகோள் ஒன்றை முன்வைத்த  முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும் ஐ.தே.கட்சியின் வலய அமைப்பாளரும், மதுரங்குளி ஜும்மா பள்ளியின் செயலாளருமான  ஏ.ஆர்.எம். றபாத் அமீன் மற்றும் மதுரங்குளி ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினர். 


அதன் நிமித்தம் மதுரங்குளி ஜும்மா பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த ஆளுநர் நஸீர்  அஹமட் அவர்களிடம் பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைவர் நிஸ்தார் பள்ளிவாசல் காணி விடயம் சம்பந்தமான மகஜர் ஒன்றை ஆளுநரிடம்  கையளித்தார்.


இதேவேளை சுமார் 60 வருடங்கள் பழமையான மேற்படி பள்ளிவாசலுக்கான காணி உறுதிப்பத்திரம் இல்லாத நிலையையும் ஆளுநரின் கவனத்திற்கு முன்வைக்கப்பட்டதுடன் இக்காணி உறுதி பிரச்சினையை ஜனாதிபதியின் மத ஸ்தானங்களுக்கான பூஜா பூமி மற்றும் புண்ணிய பூமி வேலைத்திட்டத்தின் ஊடாக தீர்வு பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக  ஆளுநர் தெரிவித்துள்ளார்.


இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். றியாஸ், ஜும்மா பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர்கள், மதுரங்குளி வர்த்தக சங்கத் தலைவர் எம்.எஸ்.டீ. அமான் உட்பட அதன் உறுப்பினர்கள், முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்கள், முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள், ஐ.தே.கட்சியின்  அமைப்பாளர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.










No comments

note