கற்பிட்டியில் இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளை மீளழைத்தல் தொடர்பான கலந்துரையாடல்
(கற்பிட்டி எம். எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
மக்கள் பிரதிநிதிகளை மீளழைத்தல் தொடர்பான கையொப்பம் சேகரிப்பு வேலைத்திட்டம் பற்றிய கலந்துரையாடல் இன்று (19) கற்பிட்டி செடோ நிறுவனத்தின் காரியாலயத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் ஜே. பத்மநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள சகல மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மீன்பிடித் தளங்களில் மீனவர்களை சந்திப்பது தொடர்பாகவும் அவர்களுக்கு மேற்படி வேலைத்திட்டத்தை தெளிவூட்டுதல் நாடகங்கள் வாயிலாக விளக்கங்கள் வழங்குவது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப் பட்டது.
இக் கலந்துரையாடலில் செடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.ஆர் முனாஸ், மேற்படி செயற்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜீ. குணசேகர் மற்றும் செடோ நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



No comments