ஜனாஸா அறிவித்தல் - மதுரங்குளி - கனமூலையைச் சேர்ந்த அப்துல் காதர் (வெலந்தா) அவர்கள் காலமானார்.
கடையாமோட்டையை பிறப்பிடமாகவும், கனமூலையை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்றவர்களான ஹனீபா, பீர்ஸா உம்மா ஆகியோரின் அன்பு மகன் அப்துல் காதர் (வெலந்தா) அவர்கள் இன்று (19) காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் ஹாஜரா உம்மா அவர்களின் அன்புக் கணவரும், சித்தி பர்ஹானா, முஹம்மத் ஜப்பார் ஆகியோரின் அன்புத் தந்தையும், M.C. ஜலீல், பரீதா உம்மா ஆகாயோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற அஸ்மா பீவியின் அன்புச் சகோதரருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (19) இஷாத் தொழுகையின் பின்னர் கனமூலை நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
தகவல்
மகன்
No comments