வளப்பற்றாக்குறையுடன் பயிற்சி பெற்ற புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் கால்பந்தாட்ட அணி வடமேல் மாகாண சம்பியன்.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
வடமேல் மாகாண எட்டு கல்வி வலயங்களின் 24 அதி சிறந்த பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதுக்குட்பட்ட கால்ப்பந்தாட்ட போட்டி தொடரில் புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் முஸ்லிம் மகா வித்தியாலய அணி சாம்பியன் மகுடம் சூடியுள்ளது.
இப்போட்டித்தொடர் அண்மையில் (17) குருநாகல் சியம்பலாகஸ்கொடுவ பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
முதலாம் சுற்றில் நேரடியாக குழுக்கள் முறையில் இரண்டாம் சுற்றுக்கு தெரிவுசெய்யப்பட்டு அதில் சிலாபம் சென் மேரிஸ் பாடசாலை அணியுடன் மோதியதில் 03 : 00 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
கால் இறுதி சுற்றில் வயம்ப ரோயல் அணியுடன் மோதி 04 : 03 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
அரை இறுதியில் குருநாகல் மலியதேவா மாதிரி பாடசாலை அணியுடன் மோதியதில் 01 : 00 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
பரபரப்பான இறுதி போட்டியில் வென்னப்புவ சென் ஜோன் பாடசாலை அணியை எதிர்கொண்டு 04 : 02 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 2024 வடமேல் மாகாண 16 வயது கால்ப்பந்தாட்ட சம்பியனாக மகுடம் சூடியுள்ளதோடு அகில இலங்கை ரீதியிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இவ்வெற்றிக்காக தலைமைத்துவம் வழங்கிய கல்லூரியின் முதல்வர் ஏ.ஜே.எம்.இல்ஹாம், பிரதி அதிபர் எம்.எஸ்.எம்.மொஹிதீன், வளப்பற்றாக்குறைக்கு மத்தியிலும் மாணவர்களுடன் இரண்டரக் கலந்து பயிற்சிகளை வழங்கிய பயிற்றுவிப்பாளர் எச்.என்.அம்லக் முஹம்மது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர் ஆகியோருக்கு பெற்றோர்கள் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
No comments