Breaking News

புத்தளம் பாலாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் அமைப்பின் முதலாவது பொதுக்கூட்டம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ எம் சனூன்)

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் 11 வருடங்கள் நிறைவையொட்டி அதன் முதலாவது பொதுக்கூட்டத்தை புத்தளம், பாலாவி முஸ்லிம் பெண்கள் மையத்தில் புத்தளம் மாவட்ட மனித உரிமைகள் அமைப்பின் விளையாட்டு துறை பணிப்பாளர் றிஸ்வான் ஜுனைத் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது .


சர்வதேச மனித உரிமைகள் நலன்புரி அமைப்பின் கீழ் பல்வேறு சமூக சேவை வேலைத்திட்டங்கள் இடம்பெறுவதாகவும் கல்வி மற்றும் விளையாட்டு போன்ற செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதன் விளையாட்டு துறை பணிப்பாளர் றிஸ்வான் ஜுனைத் தெரிவித்தார்.


இந் நிகழ்வில் மனித உரிமைகள் அமைப்பின் புத்தளம் மாவட்ட பணிப்பாளர்களான நடராசா மஞ்சுளா , மொஹமட் பைசல் பிரதி பணிப்பாளர் முஸ்தபா மொஹமட் நிம்ஷாத்,  இணைப்புச் செயலாளர் நியாஸ் ஆகியோருடன் பிரதேசத்தில் உள்ள மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





No comments

note