புத்தளம் செய்னப் முஸ்லிம் பெண்கள் ஆரம்ப பாடசாலையின் பிரதான வாயிலுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
புத்தளம் செய்னப் முஸ்லிம் பெண்கள் ஆரம்ப பாடசாலையின் பிரதான வாயிலுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் அண்மையில் (16) பாடசாலையில் அதிபர் எச்.யூ.எம்.யஹ்யாவின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் அழைப்பின் பேரில் வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் பிரதம விருந்தினராகவும், புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
புத்தளம் வடக்குக்கோட்ட ஆரம்பப்பிரிவுக்கான ஆசிரிய ஆலோசகர் எம். ஹபீல், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.ஜே.எம். நளீம் மற்றும் உறுப்பினர்கள், பாடசாலைக்கான வீதிப்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பெற்றோர் உட்பட ஏனைய பெற்றோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் போது, தரம் 02 மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட புத்தாண்டுக் கொண்டாட்டங்களையும் விருந்தினர்கள் பங்குபற்றலோடு ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது பாடசாலையிலுள்ள சகல மாணவர்களுக்கும் பாடசாலை புத்தகப்பைகளும், அப்பியாசக் கொப்பிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
பாடசாலையில் நெடுங்காலமாக நிலவி வருகின்ற நிர்வாகக்கட்டடமொன்றினை பெற்றுத்தரக் கோரிய மஹஜரும் ஆளுநருக்கு கையளிக்கப்பட்டது.
No comments