வீதியில் பயணித்துக் கொண்டிருந்த தும்பு லாறியில் திடீர் தீ
(கற்பிட்டி எம்.எச்.எம் சிராஜ், புத்தளம். எம்.யூ.எம் சனூன்)
முந்தல், கொத்தான்தீவு வீதியில் தும்புகளை ஏற்றிய லொறி ஒன்று திடீர் என தீப் பற்றி எறிந்த சம்பவம் ஒன்று இன்று (18) காலை இடம்பெற்றுள்ளது.
இது பற்றி தெரியவருவதாவது முந்தல் கொத்தான்தீவு சின்னப்பாடு வீதி ஊடாக தும்புகளை ஏற்றிய லொறி வீதியின் காணப்படும் பிரதான மின் கம்பியில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீப்பற்றியதுடன் லொறியில் காணப்பட்ட தும்புகள் முற்றாக தீக்கரையானது எனினும் கொத்தான்தீவு மக்களின் முயற்சியின் காரணமாக லொறி தீ விபத்திலிருந்து காப்பற்றப்பட்டுள்ளது.இதன் காரணமாக எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.
இச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
No comments