தேத்தாப்பளை பாடசாலை மாணவர்கள் தட கள போட்டிகளில் சாதனை.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
வென்னப்புவ நகரில் அண்மையில் (03,04) நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் தேத்தாப்பளை ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் 08 மாணவர்கள் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பாடசாலை அதிபர் அருட் சகோதரி மேரி டெல்சியா அவர்களின் வழிகாட்டலில் விளையாட்டு பொறுப்பாசிரியர் பாயிஸின் சிறந்த பயிற்றுவித்தலில் மாணவர்கள் இந்த அடைவினை பெற்றுள்ளனர்.
புத்தளம் மாவட்ட தடகள போட்டிகள் சங்கம் பாடசாலை மாணவர்களிடையே இப்போட்டிகளை ஏற்பாடு செய்திருந்து.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் :
என்.ஏ.பிரதீஷ் - 13 வயதின் கீழ்
உயரம் பாய்தல் 03 ம் இடம்.
ஏ.ஆர்.எம்.பிரமோதி - 15 வயதின் கீழ்
பரிதி வட்டம் வீசுதல் 02 இடம்,
குண்டு எறிதல் - 03 ம் இடம்
ஏ.லிஹாரா - 13 வயதின் கீழ்
உயரம் பாய்தல் - 03 ம் இடம்
டபிள்யூ.டி.எஸ்.தனிஷா - 15 வயதின் கீழ்
உயரம் பாய்தல் 02 ம் இடம்
எஸ்.ஜே.செனூரி தேவ்மினி - 18 வயதின் கீழ்
ஈட்டி எறிதல் 03 ம் இடம்
டி.எஸ். தருஷா லக்ஷிதன் - 11 வயதின் கீழ்
உயரம் பாய்தல் 03 ம் இடம்
சீ.கே.எம்.சதுர்த்தனா - 15 வயதின் கீழ்
உயரம் பாய்தல் - 03 ம் இடம்
எல்.லுக்னி சுஜீவனி - 13 வயதின் கீழ்
நீளம் பாய்தல் 03 ம் இடம்.
No comments