கற்பிட்டியில் இடம்பெற்ற ஹோட்டல் துறையில் தொழில் வழிகாட்டல் செயலமர்வு.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன் மற்றும் கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
புத்தளம் ஹோட்டல் முகாமைத்துவ சர்வதேச கல்வி நிறுவனம் கற்பிட்டி பிரதேச செயலகத்தில் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சியை திங்கட்கிழமை (10) நடாத்தியது.
கற்பிட்டி பிரதேச செயலகம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த செயலமர்வு நடாத்தப்பட்டது.
ஹோட்டல் முகாமைத்துவ கல்வி நிறுவனத்தின் நிபுணர்கள் குழு, ஹோட்டல் முகாமைத்துவ நுண்ணறிவு மற்றும் தொழில்சார் அறிவை ஆர்வமுள்ள மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
No comments