JobVibe.lk - Sri Lanka Job Portal

வடமேல் மாகாண ஆளுநருடன் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்.

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் அவர்களுக்கும் வடமேல் மாகாண ஆளுநர் அகமத் நசீர் அவர்களுக்குமான சந்திப்பு நேற்று (10) ஆளுநர் மாளிகையில் இடம்பெற்றது. 


 இந்த சந்திப்பில் புத்தளம் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. 


அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களுடைய சேவை நாடிகளான புத்தளம் மாவட்ட அரச உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநருடன் கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொடுத்தார்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال