Breaking News

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு புத்தளம் ரத்மல்யாவில் மர நடுகையும், சிரமதான நிகழ்வும்

(கற்பிட்டி எம் எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம் யூ.எம் சனூன்)


சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு புத்தளம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மர நடுகை வேலைத்திட்டமும், சிரமதானப்பணியும் இன்று புத்தளம் ரத்மல்யாய கிராம சேவகப்பிரிவில் நடைப்பெற்றது.


புத்தளம் ரத்மல்யாயா கிராமத்தின் கிராம உத்தியோகத்தர்  தௌபீகா தலைமையில் நடைப்பெற்றதுடன் , சமூக ஆர்வலரும், புத்தளம் மத்தியஸ்த சபை அதிகாரியுமான முஜாஹித் நிஸார் முதல் மரக்கன்றை நாட்டி வைத்தார். சிட்டி போயிஸ் சமூக அமைப்பு , அப்பிரதேசத்தின் மகளிர் அமைப்பின் உதவியுடன் இன்று 2024-06-11 செவ்வாய்க்கிழமை  நடைப்பெற்றது. அப்பிரதேசத்தின்  பொருளாதர அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு பார்த்தீபன், சமுர்த்தி அபிவிருத்தி திருமதி ரினூஸா வழிகாட்டலினால் வெற்றிகரமாக நடைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.









No comments

note