புத்தளம் ஆதார வைத்தியசாலையின் உட்புற சுவற்றில் அழகிய வர்ண ஓவியங்கள்
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
நோயாளர்களாக வருகை தரும் சிறார்களின் மகிழ்ச்சியினை கருத்தில் கொண்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையின் உட்புற சுவற்றில் அழகிய வர்ண ஓவியங்கள் வரைந்து வழங்கப்பட்டுள்ளன.
புத்தளம் ஆதார வைத்தியசாலையின் சிறுவர் வார்ட்டுக்கு பொறுப்பான டாக்டர் சுஜித் மற்றும் டாக்டர் சனூசியா ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
சமூக ஆர்வலர் முஹம்மட் சாமிலின் முயற்சியினால் புத்தளம் வலய கல்வி பணிமனையின் சித்திரப்பாட ஆசிரிய ஆலோசகர் கலாநிதி எம்.எம்.முஹம்மது மற்றும் அவரது மாணவர் அஷ்ஷெய்க் முஹம்மது ஜப்ரீஸ் ஆகியோரது ஒத்துழைப்போடும் புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் முன்னால் நகர சபை உறுப்பினர் ரனீஸ் பதியுதீனின் பங்குபற்றுதலோடும் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
No comments