கனமூலை தாருஸ்ஸலாம் வைத்திய நிலையத்தின் புதிய கட்டிட திறப்பு விழா!.
கனமூலை தாருஸ்ஸலாம் வைத்திய நிலையத்தின் புதிய கட்டிட திறப்பு விழா எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
தாருஸ்ஸலாம் வைத்திய நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எச்.எம். நஜீம் (ஷர்கி) தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில்
பிரதம அதிதியாக
முஸ்லிம் ஹேன்ஸ் (Muslim Hands) அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் ஏ.எம். மிஹ்ழார் அவர்களும்,
கௌரவ அதிதிகளாக
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து முகம்மது அப்துல்லா அஹ்மத் பாரிஸ் அவர்களும் அஷ்ஷெய்க் இஸட்.பீ.எம். அப்துல் ரஹ்மான் உட்பட
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை தலைவர் மற்றும் கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
எனவே உங்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றார்கள்
தாருஸ்ஸலாம் வைத்திய நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எச்.நஜீம் (ஷர்கி) உட்பட அதன் உறுப்பினர்கள் மற்றும் தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன்புரிச்சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம். முஸம்மில் உட்பட அதன் உறுப்பினர்கள்.
காலம் :- 18/05/2024
நேரம் :- 9.00 am சனிக்கிழமை
இடம் :- கனமூலை பெரிய பள்ளி வளாகம்
DMC
No comments