ராஜாங்கனை மற்றும் அங்கமுவ ஆகிய இரு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு...!
ரஸீன் ரஸ்மின்
சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக, ராஜாங்கனை மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று (16) திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரி தெரிவித்தார்.
இதன்படி இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் 2 அடி உயரத்திலும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 3 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளன.
இதனால், இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 2400 கன அடி நீரும், அங்கமுவ நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 1800 கன அடி நீரும் வெளியேறுவதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரி மேலும் தெரிவித்தார்.
No comments