புத்தளம் மற்றும் சிலாபம் பகுதிக்கு புதிய பதில் காதி நீதிபதியின் விசேட மக்கள் சந்திப்பு நாளை
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
புத்தளம் மற்றும் சிலாபம் பகுதிக்கான முன்னைய காதி நீதிபதியின் பதவிக் காலம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் விவாகரத்து சான்றிதழ் வழங்குவதற்கு வழக்காலியிடம் ஐயாயிரம் ரூபாய் இலஞசம் பெற்ற குற்றச்சாட்டில் காதி நீதிபதி கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் புத்தளம் மற்றும் சிலாபம் பகுதிக்கான பதில் காதி நீதிபதியாக நீர்கொழும்பைச் சேர்ந்த அஷ்ஷேஹ் முஹாஜிர் (இஹ்ஸானி) நீதிச்சேவை ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக காதி நீதிமன்ற செயற்பாடுகளை துரிதமாக ஆரம்பிப்பதிலும் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை பொறுப்பேற்பதிலும் நடைமுறை பிரச்சினைகளும் சட்ட சிக்கல்களும் காணப்படுவதனால் பொது மக்களுக்கு துரித சேவையை வழங்குவதற்கான முன் ஏற்பாடாக எதிர்வரும் 2024.05.12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் புத்தளம் மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள கலாச்சார மண்டபத்தில் விஷேட மக்கள் சந்திப்பு ஒன்று எற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் புத்தளம் காதி நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்தவர்கள், புதிதாக வழக்குகளை பதிவு செய்ய இருப்பவர்கள் மற்றும் தாபரிப்பு தொகைகளை பெற இருப்பவர்கள் தங்களிடம் உள்ள உரிய ஆவணங்களுடன் வருகை தந்து காதி நீதிமன்ற சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறு புத்தளம் சிலாபம் பகுதிக்கான பதில் காதி நீதிபதி அறிவித்துள்ளார்.
No comments