JobVibe.lk - Sri Lanka Job Portal

உடப்பு, ஆண்டிமுனை கிராமத்திற்கான நீர் வழங்கல் திட்டம் அங்குரார்ப்பணம்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

உடப்பு ஆண்டிமுனை கிராமத்திற்கான நீர் வழங்கல் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 2024/05/13 ம் திகதி திங்கட்கிழமை முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம் றியாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.



சனத் நிசாந்த பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் ஆண்டிமுனை  எம்.சஹாதேவனின் வேண்டுகோளின் பெயரில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம் றியாஸின் மேற்பார்வையின் கீழ் காலஞ்சென்ற முன்னாள் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேராவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இடம்பெற உள்ள உடப்பு ஆண்டிமுனை கிராமத்திற்கான நீர் வழங்கல் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு.


இதில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சின்தக மாயாதுன்னேவின் பங்குபற்றுதலுடன்  சனத் நிசாந்த பெரேராவின் பாரியாரும் சட்டத்தரணியுமான சாமரி பிரியங்காவின் திருக்கரங்களால் அரம்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال