மாதாந்தம் 10 கிலோ இலவச அரிசி 24 இலட்சம் குடும்பங்களுக்கு ஜனாதிபதி நடவடிக்கை
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன் )
நாட்டிலுள்ள 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச அரிசி வழங்கும் நிகச்சித் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வரவேற்பு மற்றும் பாராட்டுக்கள் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments