Breaking News

ரூபவாஹினியின் தனித்துவ முயற்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி

 ரஸீன் ரஸ்மின்

இலங்கையின் தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக செயற்கை விவேகம் அதாவது AI தொழில்நுட்பத்தை  பயன்படுத்தி தமிழ் மொழியில் இரண்டு செய்தி வாசிப்பாளர்களை உருவாக்கி பிரதான இரவுநேர தமிழ்ச் செய்தி அறிக்கையை ஒளிபரப்பி இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் நேத்ரா அலைவரிசை சாதனை படைத்துள்ளது.


இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்ச் செய்தி ஒளிபரப்பில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் செய்தி பிரதானியும் நேத்ரா அலைவரிசையின் பிரபல்யமான செய்தி வாசிப்பாளருமான CBM. ஷியாம் மற்றும் பிரபல பெண் செய்தி வாசிப்பாளர் தீபதர்ஷினி ஆகியோரின் AI பதிவுகள் இடம்பெற்றுள்ளன. 


அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (2024 - 05 - 10) இரவுநேர பிரதான தமிழ்ச் செய்தி ஒளிபரப்பில் முழுமையாக தமிழ் மொழியில் செய்திகளை வழங்கினர். 


வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த பதிவோடு நேத்ரா அலைவரிசை எதிர்காலத்திலும் இவ்வாறான பல புதிய பரிணாமங்களோடு  தன் செய்தி அறிக்கையிடல்களை  அறிமுகப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.





No comments

note