Breaking News

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பபங்களுக்கு ஆதரவு வழங்கி அந்த மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் முழு நாட்டையும் உள்ளடக்கும் விதமாக குறைந்த வருமானம் பெறும் சுமார் 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 10 கிலோ கிராம் நாட்டு அரிசியை இரண்டு (02) மாத காலத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 


இவ் வேலைத்திட்டம் தேசிய ரீதியாக (21) அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


அந்தவகையில் முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 601/B, நல்லாந்தழுவை கிராம சேவகர் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு முதற் கட்டமாக இன்று (26) காலை சுமார் 410 குடும்பங்களுக்கு அரிசி வாழங்கி வைக்கப்பட்டுள்ள்ளது.


இந்நிகழ்வில் ஐ.தே.கட்சி பொதுச் செயலாளரின் முஸ்லிம் விவகாரங்களுக்கான செயலாளரும், முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினருமான ஏ.ஆர்.எம்.ரபாத் அமீன் மற்றும் நல்லாந்தழுவை ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் என்.எம். சுகைப்தீன், நல்லாந்தழுவை ஐ.தே.கட்சியின் Digital அமைப்பாளர் எஸ்.ஏ.தௌபினா ஆகியோர் கலந்து கொண்டு அரிசியினை வழங்கி வைத்தனர்.


இதேவேளை இதனை வழங்கி வைத்த அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கேபண்டார, மற்றும் ஐ.தே.கட்சியின் வடமேல் மாகாணத்திற்கான பொறுப்பாளர் முன்னாள் கல்வி அமைச்சர் சிரேஷ்ட சட்டத்தரணி அகிலவிராஜ் காரியவம்சம் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஏ.ஆர்.எம். ரபாத் அமீன் தெரிவித்தார்.









No comments

note