Breaking News

புத்தளத்தில் பலஸ்தீனுக்கு ஆதரவாக இடம்பெற்ற மக்கள் அமைதி ஆர்பாட்டம்

(எம்.யூ.எம்.சனூன்)

கடந்த 45 வருடங்களாக சர்வதேச நாடுகளால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் "பைத்துல் முகத்தஸ்" தினம் ரமழானின் இறுதி வெள்ளிக்கிழமை (05) புத்தளம் பெரிய பள்ளிக்கு முன்பாக இடம்பெற்றது.


புத்தளம் முஹியத்தீன் ஜூம்ஆ பெரிய பள்ளியில் ஜும்ஆ தொழுகை நிறைவடைந்ததும் இந்நிகழ்வு ஆரம்பமானது.


பலஸ்தீனுக்கு ஆதரவாக பொது மக்கள் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம்.இல்யாஸ் இந்நிகழ்வுக்கு தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் இப்லால் அமீன், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஜௌபர் மரிக்கார் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் இவ் ஆர்ப்பாட்டத்தில்  பங்கேற்றிருந்தனர்.


பெருமளவிலான பொலிஸார் பெரிய பள்ளிக்கு முன்பாக குவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆர்ப்பாட்ட பேரணிக்கும் ஒலி பெருக்கி பாவனைக்கும் பொலிஸார் தடை விதித்திருந்தனர்.


இறுதியாக டாக்டர் ஐ.எம்.இல்யாஸ், இப்லால் அமீன் ஆகியோரது உணர்வு பூர்வமாக உரையினை தொடர்ந்து அமைதியான இந்த ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.








No comments