Breaking News

கற்பிட்டி பொலிஸார் - வர்த்தக சங்கம் விசேட கலந்துரையாடல்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

கற்பிட்டி வர்த்தக சங்கத்திற்கும் பொலிஸாருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று கற்பிட்டி பஸார் ஜூம்ஆ பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை (05) ஜூம்ஆ தொழுகையின் பின் இடம்பெற்றது. 


கற்பிட்டி வர்த்தக சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.எம் றியாத் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.ஏ.டப்யூ.எஸ் எதிரிசிங்க கற்பிட்டி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி சமன் மற்றும் கொமினிட்டி பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெயக்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர்.


எம்மை  எதிர்நோக்கியுள்ள நோன்பு பெருநாள் மற்றும் தமிழ் சிங்கள புதுவருட பிறப்பு என்பவற்றினை முன்னிட்டு கற்பிட்டி நகரின் வர்த்தக நடவடிக்கைகள் காரணமாக சனநெரிசல் அதிகரித்துள்ளது. இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருட்டு கும்பல் தமது கைவரிசையை காட்டுவதற்கு  வாய்ப்புகள் உண்டு எனவே இவைகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை செயற்பாடுகளாக உங்கள் வியாபார நிலையங்களில் முடியுமான வரை கண்கானிப்பு கெமராக்கல் பொறுத்துதல் கெமராக்கல் உள்ள இடங்களில் அதன் தொழில்நுட்ப செயற்பாடுகளை உறுதிப்படுத்தல் என்பவற்றுடன் கற்பிட்டி பிரதேசத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் கடல்மார்க்கமான சட்டவிரோத கடத்தல் நடவடிக்கை செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருள் விற்பனை,  பாவனை இவற்றை தடுத்து நிறுத்துவதற்கான சகல செயற்பாடுகளையும் கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் எனினும்  இவற்றுக்கு ஆளனி பற்றாக்குறை எமது கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் காணப்படுவதாகவும் தெரிவித்தவர். தானும் தமது பொலிஸ்  குழுவும் இணைந்து கற்பிட்டி பிரதேசத்தில் போதைப் பொருளை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை பொது மக்களுடன் இணைந்து செயற்படுத்திவருவதனையும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.







No comments