கற்பிட்டி பிரதேச பெண்கள் அபிவிருத்தி கூட்டுறவு அமைப்பும் அதன் செயற்திட்டங்களும்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
பெண்கள் நுன் கடன் திட்டங்களில் சிக்குண்டு மனநிலை பாதிக்கப்படும் நிலை அதிகரித்துள்ளது இவர்களை மீட்டெடுப்பதனை பிரதான நோக்காக கொண்டு கற்பிட்டி பிரதேசத்தின் பெண்களை மையப்படுத்தி கற்பிட்டி பிரதேச பெண்கள் அபிவிருத்தி கூட்டுறவு அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அமைப்பு சகல மதங்களையும் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கியதாக தற்போது சுமார் 500 பெண்கள் அங்கம் வகிப்பதாகவும் இது இவ்வருட இறுதிக்குள் 2000 பெண்களாக அதிகரிக்கப்படும் எனவும் எதிர்காலத்தில் 10,000 பெண்களை இவ் அமைப்புக்குள் உள்வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கற்பிட்டி பிரதேச பெண்கள் அபிவிருத்தி கூட்டுறவு அமைப்பின் தலைவி ஏ.சீ.எஸ் றுவைஸா தெரிவித்தார்.
மேலும் இவ் அமைப்பின் ஊடாக சுய நம்பிக்கைக் குழு மற்றும் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அங்கத்தவர்கள் மூலம் சேமிக்கப்படும் பணம் அவர்களுக்கிடையில் வட்டி இல்லா சிறு கடன் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றதாகவும் அத்தோடு சிறுவர்கள், பெண்கள் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் அது தொடர்பான விழிப்புணர்வுகள், பிறப்பு சான்றிதழ் பதியப்படாதவர்களை பதிவு செய்வதற்கான வழிகாட்டல்கள், பாடசாலை கல்வியை இடைநடுவில் கைவிட்ட சிறுவர்களை அக் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கான வழிகாட்டல்கள் என்பவற்றுடன் , பெண்களின் சுயமான சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தி சிறு சிறு வியாபார நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளவது மற்றும் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தல், வெளிப் பிரதேச பெண்கள் கூட்டுறவு அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தமது பொருட் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மேற்படி முழுச் செயற்பாட்டிற்குமான நிகழ்ச்சித் திட்டங்களையும் அனுசரனைகளையும் கற்பிட்டி மனிதாபிமான சகோதரத்துவ நிறுவனமும் அதன் செயற்த்திட்ட பணிப்பாளரும் நிறைவேற்றுக் குழுச் செயலாளர் ஏ.எம்.எம் மஷுர் அவர்களும் முழுமையா வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது எனவும் தெரிவித்தார்.
No comments