கற்பிட்டி கூட்டுறவு சங்க பொதுச் சபையின் இருவர் வெளியேற்றப்பட்டனர். நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
(கற்பிட்டி சியாஜ்)
கற்பிட்டி வரையறுக்கப்பட்ட பல நோக்கு கூட்டுறவு சங்க பொதுச்சபையின் தற்போதைய உறுப்பினர்களும் முன்னால் தலைவர்களான இருவருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மாணம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை பொதுச் சபையின் 31 உறுப்பினர்களால் கையொப்பம் இடப்பட்டு கூட்டுறவுச் செயலாளருக்கு கையளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இவ் விசேட பொதுச் சபைக் கூட்டம் சனிக்கிழமை (30) சங்கத்தின் பிரதான காரியத்தில் இடம்பெற்றது.
மேற்படி சங்கத்தின் பொதுச் சபையில் 58 உறுப்பினர்கள் காணப்பட்ட போதும் கூட்டத்திற்கு 42 உறுப்பினர்கள் மாத்திரமே சமூகமளித்தனர். அத்தோடு விசேட அழைப்பின் பெயரில் மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் உதவி ஆணையாளர் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அதிகாரி ஆகியோரும் சமூகமளித்திருந்தமை விசேட அம்சமாகும்.
கற்பிட்டியின் வரையறுக்கப்பட்ட பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் விசேட பொதுச் சபைக் கூட்டம் ஆரம்பம் முதல் மிகவும் பரபரப்புடனும் வாதப் பிரதிவாதங்களுடன் குழப்பமான சூழல் காணப்பட்டது. முன்னால் தலைவர்களாகவும் தற்போதைய உறுப்பினர்களாகவும் உள்ள றஸ்ஸாக் மற்றும் முஸம்மில் ஆகிய இருவருக்கும் எதிராக பொதுச் சபை அங்கத்தினர்கள் 31 பெயரின் கையொப்பத்துடன் முன்வைக்கப்படுள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தொடர்பாக பகிரங்க வாக்கெடுப்புக்கு செல்வதா அல்லது இரகசிய வாக்கெடுப்புக்கு செல்வதா என்ற வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு இறுதியில் இரகசிய வாக்கெடுப்புக்கு செல்வது என்ற தீர்மானமத்திற்கு அமைய வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் இருவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தி கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 19 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் ஒரு வாக்கு நிராகரிக்கப்பட்டது. இதன்படி இரு உறுப்பினர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் இருவரையும் பொதுச் சபையின் அங்கத்துவத்திலிருந்து வெளியேற்றுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments