Breaking News

கற்பிட்டியில் பேரீத்தம் பழம், நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்கும் நிகழ்வு

(கற்பிட்டி - சியாஜ்) - (எம்.யூ.எம்.சனூன்)

கற்பிட்டி நகரில் உள்ள பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி சமைப்பதற்கான அரிசியும் பாடசாலை மற்றும் அரபுக் கல்லூரி ஆசிரியர்களுக்கான பேரீத்தம் பழங்களும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் இனால் வெள்ளிக்கிழமை (22) வழங்கி வைக்கப்பட்டது .


மேற்படி நிகழ்வு கற்பிட்டி சின்னக்குடியிருப்பு  இணைப்பாளர் யூ.எம் ஜின்னா வின் ஏற்பாட்டில் பா.உறுப்பினரின் நண்பரும் தொழிலதிபருமான அல்ஹாஜ் அலி சப்ரியின் களஞ்சியசாலை வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் , அரபுக் கல்லூரி அதிபர்கள், பாடசாலை அதிபர்கள், பா.உ செயலாளர் எம்.எம் நௌபர், இணைப்பாளர் நிஷாத், கற்பிட்டி ஊடக இணைப்பாளர் முஸம்மில் ஆகியோர் கலந்து கொண்டனர்.


புத்தளம் மாவட்டத்தில் உள்ள சுமார் 400 பள்ளிவாசல்களுக்கு 50 கிலோ அரிசி வீதம் தனது சொந்த நிதியின் ஊடாக வழங்கப்பட்டு உள்ளதுடன் துபாய் நாட்டு பிரதிநிதி ஒருவரினால் பா.உ அலி சப்ரி றஹீம் கிடைக்கப் பெற்ற பேரீத்தம் பழங்களும் மாவட்ட மட்டத்தில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரபுக் கல்லூரி உஸ்தாத் மார்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது .








No comments