Breaking News

புத்தளம் - தில்லையடி தனபாக்கியம் அற நிதியத்தினால் அரிசிப்பொதிகள் வழங்கி வைப்பு

 (எம்.யூ.எம்.சனூன்)

புத்தளம் தில்லையடி தனபாக்கியம் அற நிதியத்தினால் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு இலவசமாக அரிசிப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


இந்நிகழ்வு அண்மையில் (22) தில்லையடியில் அமைந்துள்ள தனபாக்கியம் அற நிதியத்தில் அதன் ஸ்தாபக தலைவர் சுப்பையா பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.


தில்லையடி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட 200 பேர்களுக்கு இதன் போது இலவசமாக அரிசிப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.


இந்நிகழ்வில் புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் முஹம்மது தில்ஷான், தில்லையடி கிராம அலுவலர் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் அஞ்சனா, புத்தளம் பிரதேச செயலக சமூக சேவை பிரிவு உத்தியோகத்தர் பத்மலதா, தனபாக்கியம் அற நிதியத்தின் பொருளாளர் பீ.எம்.ரூபன் உள்ளிட்ட அதன் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.








No comments