நாகவில்லு ஜூம்ஆ மஸ்ஜித் பேஷ் இமாம் அஸ்மீர் மௌலவி சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம்
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - நாகவில்லுவைச் சேர்ந்த அஷ்ஷெய்க் நஸீர் அஸ்மீர் (உஸ்வி) புத்தளம் மாவட்ட சமாதான நீதிவானாக இன்று (14) வெள்ளிக்கிழமை புத்தளம் மாவட்ட நீதிவான் எஸ்.ஏ.எம்.சி.சத்துருசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர், குருநாகல் உஸ்வதுல் ஹஸனாஹ் அரபுக் கல்லூரியில் மெளலவி அல்ஆலிம் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.
மேலும், இடம்பெயர்ந்தோருக்கான காழி நீதிமன்றம் மற்றும் புத்தளம் காழி நீதிமன்றம் என்பனவற்றில் முன்னாள் ஜூரியாக கடமையாற்றிய இவர், புத்தளம் எருக்கலம்பிட்டி (நாகவில்லு) ஜூம்ஆ மஸ்ஜிதின் பேஷ் இமாமகவும் தற்போது கடமையாற்றி வருகின்றார்.
இவர் முஹம்மது காசிம் நஸீர் - முஹம்மது ஷரீப் காமிலா தம்பதிகளின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments