Breaking News

புத்தளம் மாவட்ட வறிய மக்களுக்கான வறுமான நிதி வேலைத்திட்டம் பா.உ அலி சப்ரி றஹீம் ஆரம்பித்தார்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

 புத்தளம் மாவட்டத்தில் உள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் அவர்களின் பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காகவும் புத்தளம் மாவட்ட கல்வி மறுமலர்ச்சிக்காகவும் , பொதுத் தேவைகளுக்காகவும் பயன்படும் வகையிலான  வறுமான நிதியினை பெறும் வேலைத்திட்டத்தினை "மூச்சு விடுபவன் மனிதன் அல்ல முயற்சி செய்பவனே மனிதன் " என்ற மகுட வாசகத்துடன் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் ஆரம்பித்து வைத்தார்.


புத்தளம் நகர மத்தியில் தனக்கு சொந்தமான அசோகா திரையரங்கு அமைய பெற்ற இடத்தினை கடந்த 20 வருடகால போராட்டத்தில் எண்ணற்ற சதிகளுக்கு மத்தியில் சலிக்காத தொடர் முயற்சியும் புத்தளம் மாவட்ட மக்கள் தந்த அதிகாரத்தையும் கொண்டே  இதனை முழுமையாக பெற்றுக் கொள்ள முடிந்தது. இந்த இடத்தில் ஆறு மாடி ஷொப்பிங் மால் நிர்மாணிக்கப்பட உள்ளதாகவும் அதன் நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்றதும் அது ஒரு பள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பட்டு அதன் முழு வருமானமும் புத்தளம் மாவட்டத்தின் மேற் குறிப்பிட்ட பொதுத் தேவைக்கு பயன்படுத்தப்படும் எனவும் புத்தளம் மாவட்ட பா.உ அலி சப்ரி றஹீம் தெரிவித்தார் .




No comments