JobVibe.lk - Sri Lanka Job Portal

மதுரங்குளியில் தண்ணீர் எடு்க்க சென்ற சிறுமி, கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - மதுரங்குளி,  விருதோடை பிரதேசத்தில் சிறுமி ஒருவர் நேற்று (15) மாலை கிணற்றில் விழுந்து  உயிரிழந்துள்ளார்.


மதுரங்குளி - விருதோடை பகுதியைச் சேர்ந்த 06 வயதுடைய பாத்திமா சனா எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சிறுமி நேற்று (15) மாலை 6.30 மணிக்கு தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் வாளி ஒன்றின் உதவியுடன் தண்ணீர் எடுக்கச் சென்ற வேளையில் கிணற்றில் தவறி விழுந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கிய சிறுமி மீட்கப்பட்டு, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال