கல்முனை ஸாஹிராவுக்கு அதாஉல்லாவினால் 05 மில்லியன் ஒதுக்கீடு
(ஏ.எம். ஆஷிப்)
தேசிய காங்கிரஸ் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு 05 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் திங்கட்கிழமை (04) அவர் இக்கல்லூரிக்கு விஜயம் செய்தார்.
இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் அதிபர் எம்.ஐ.ஜாபீர் கல்லூரியில் அவசியம் முன்னெடுக்க வேண்டிய வேலைத் திட்டங்கள் அடங்கிய முன்மொழிவுகளை அதாஉல்லாவிடம் சமர்ப்பித்து, அவை குறித்து தெளிவுபடுத்தினார்.
அதேவேளை கல்லூரியின் 75 ஆவது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு கல்லூரியின் பிரதான நுழைவாயில் வரவேற்பு முகப்பை (Gateway) அமைப்பதற்கும் சுற்றுமதிலை புனரமைப்பு செய்வதற்கும் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து முதற்கட்டமாக ஐந்து மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா இதன்போது தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.ஏ. ஆஷிக் உட்பட கல்லூரியின் பிரதி அதிபர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகளும் பங்கேற்றிருந்தனர்.
No comments