Breaking News

முஷாரப் எம்.பி பொதுமன்னிப்பு கோர வேண்டும் - சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மன்றம் வலியுறுத்து!

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தனது இயலாமையை மறைப்பதற்காக சிரேஷ்ட முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரிகள் மீது கை நீட்டியுள்ளமையை வன்மையாக கண்டிக்கிறோம். என சம்மாந்துறை பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மன்றம் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். எம். முஷாரப் தலைமையில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் முஸ்லிம் சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு ஆங்கிலம், சிங்கள மொழிகளில் புலமை இல்லாததன் காரணமாக அவர்களை அமைச்சுகளின் உயர் பதவிகளுக்கு நியமிக்க முடியாமல் உள்ளது என பகிரங்கமாக அவர்கள் மீது குற்றம்சாட்டி உள்ளமையை அடுத்தே சம்மாந்துறை பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மன்றம் இந்த கண்டன அறிக்கையினை வெளியிட்டுள்ளது.


அதில் மேலும் தெரிவித்துள்ளதானது,


முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரிகளை கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்களாக நியமிக்காதயிட்டு அதுக்கு எதிராக முஷாரப் எம்.பி கேள்வி எழுப்பாமல் சோரம் போய்விட்டு நீண்ட காலம் நிர்வாக ரீதியாகவும் மொழி ரீதியாகவும் திறமையான எமது நிர்வாக சேவை அதிகாரிகளை ஏளனம் செய்ததை யாராலும் மன்னிக்க முடியாது.


குறிப்பாக சம்மாந்துறை மண் ஈன்றெடுத்த இரு சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகளை குறிவைத்து இவ்வாறான கருத்துக்களை முன்வைத்து சம்மாந்துறை மக்களின் மனங்களையும் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் மனங்களையும் புண்படுத்தியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் இது தொடர்பில் பொதுமன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.


தீர்வே விடிவு என்ற கோஷத்தில் அரசியல் செய்யும் முஷாரப் எம்.பி இன்று முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரிகளை உயர்வு பதவிகளில் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் தனது சுயநல அரசியலுக்காக அதிகாரிகளை காட்டிக்கொடுத்து 'தீர்வை பொய்' என்பதை இன்று மக்கள் முன் நிரூபித்துள்ளார் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





No comments

note