ஏத்தாளை தமிழ் வித்தியாலய மாணவர்கள் அலரி மாளிகை விஜயம்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
கற்பிட்டி ஏத்தாளை அரசினர் றோமன் கத்தோழிக்க தமிழ் வித்தியாலய மாணவர்கள் அலரி மாளிகைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
மேற்படி பாடசாலை மாணவர்களை கௌரவ பிரதம மந்திரி தினேஷ் குணவர்தன அவர்கள் அன்புடன் வரவேற்றதுடன் இந்த வருகையை நினைவு கூறும் வண்ணம் நினைவுப் பலகையையும் மரக்கன்றையும் பாடசாலைக்கு வழங்கி வைத்தார்.
அத்தோடு தமது பாடசாலைக்கு பிரதமர் விஜயம் செய்வது பற்றியும் கற்பிட்டிக்கான நிரந்தர பிரதேச செயலாளர் நியமனத்தின் தேவைப்பாடு பற்றியும் கலந்துரையாடியதாக பாடசாலையின் அதிபர் எம். நஜீப்தீன் தெரிவித்தார்.
No comments