புத்தளத்தைச் சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கும் தங்கப்பதக்கம்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
மாத்தறை கொட்டவில விளையாட்டு மைதானத்தில் இன்று(16) இடம்பெற்ற சர்வதேச மாஸ்டர் மெய்வல்லுனர் திறந்த போட்டிகளில் 2023ல் புத்தளத்தைச் சேர்ந்த எம்.எப்.எம் ஹுமாயூன் உயரம் பாய்தல் போட்டியில் தங்கப்பதக்கத்தையும் எம்.எப்.எம் துபையில் நீளம் பாய்தல் போட்டியில் தங்கப்பதக்கத்தையும் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.
இவர்கள் இருவரும் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் சுகாதாரமும் உடற்கல்வியும் ஆசிரியர்களாக கடமையாற்றும் அதே வேலை புத்தளம் பாத்திமா கல்லூரிக்கும் இணைப்பு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments