குவைத் நாட்டின் புதிய மன்னராகிரார் ஷேக் மிஷால் அல் அகமது அல் ஜாபர் அல் சபா
குவைத்தின் 17வது அமீராக துணை அமீர் ஷேக் மிஷால் அஹ்மத் அல் சபா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சற்று முன்னர் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2020 முதல் குவைத்தின் துணை ஆட்சியாளராக இருக்கும் ஷேக் மிஷால் அல் அஹ்மத் அல் சபா, மறைந்த அமீர் ஷேக் நவாப்பின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார்.
15 நவம்பர் 2021 முதல், ஷேக் நவாப் அவர்களுக்கு ஏற்ப்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக 83 வயதான ஷேக் மிஷால் அமீரின் சிறப்பு அதிகாரங்களைக் கையாள நியமிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments