Breaking News

புத்தளம் கல்வி வலய இடமாற்ற மேன்முறையீட்டு பரிசீலனை

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

புத்தளம் கல்வி வலயத்தில் ஒரே பாடசாலையில் 08 வருடங்களுக்கு மேல் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்கள் தொடர்பில் மேன்முறையீடுகளை சமர்ப்பித்த ஆசிரியர்களின் மேன்முறையீட்டு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை (19) மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் புத்தளம் வலய கல்விப் பணிமனையில் இரு கட்டங்களாக இடம்பெற உள்ளது.


இதன்படி காலை 09.30 மணி முதல் 12.30 மணி வரை புத்தளம் தெற்கு, புத்தளம் வடக்கு மற்றும் கற்பிட்டி கோட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்கும் பி.பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை ஆனமடுவ மற்றும் பள்ளம கோட்டங்களில் உள்ள ஆசியர்களுக்கும் நடைபெற உள்ளதாக புத்தளம் வலய கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.




No comments

note