Breaking News

புத்தளத்து அரசியல் உரிமையிலும் அதிகாரத்திலும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் தலையிடுவதற்கு எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது - புத்தளத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நியாஸ்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

புத்தளத்தின் அரசியல் உரிமையும் அதிகாரமும் புத்தளம் மக்களுக்குரியது அதனை கூறு போடவோ தான் நினைத்தெல்லாம் செய்வதற்கோ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் க்கு எவ்வித அதிகாரமும் இல்லை என வடமேல் மாகாண சபையின் முன்னால் உறுப்பினர் எஸ்.எச்.எம் நியாஸ் புத்தளத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:..

கடந்த 33 வருடமாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்காமல் அரசியல் அனாதையாக காணப்பட்ட புத்தளம் தொகுதி மக்கள் தமக்கான பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொள்ள வேணடும் என்ற முனைப்போடு உலமாக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள் என சகலரையும் ஒன்றினைத்து ஓரே கூட்டணியாக உறுவாக்கப்பட்டு அதன் மூலம் புத்தளம் வாக்காளர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றியாக புத்தளம் தொகுதிக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் 33 வருடங்களின் பின்பு கிடைக்கப் பெற்றது.

அந்த பாராளுமன்ற உறுப்பினரை வெளியேற்றுவதற்க்கு பல முயற்சிகளை இந்த மக்கள் காங்கிரஸ் உடைய தலைவர் மேற்கொள்வது மகவும் வேடிக்கையாக இருக்கின்றது.


அது மாத்திரம் இன்றி புத்தளத்து அரசியல் பரப்பில் தலையிட முயல்வதும் புத்தளத்து அரசியல் பரப்பை கூறுபோட நினைப்பதனையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேணடும். புத்தளத்து அரசியல் புத்தளம் மக்களுக்கு உரியது இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரோ அவரின் அடி வருடிகளோ தலையிடுவதனை புத்தளம் மக்களாகிய நாங்கள் எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டோம் என்பதனை இங்கு கூறிக்கொள்வதுடன் இதற்காகு எதிராக களத்தில் இறங்கி போராடுவதற்கும் புத்தளம் மக்கள் என்ற வகையில் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதனையும் இங்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன். 


மேலும் இந்த புதாதளம் அரசியல் பரப்பில் பாராளுமன்றத்தையோ, மாகாண சபையையோ, உள்ளூராட்சி மன்றங்களிலோ யார் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்பதனை புத்தளத்து அரசியல்வாதிகளும் புத்தளத்து மக்களும் தீர்மானிப்பார்கள் தவிர இதனை தீர்மானிப்பதற்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினருக்கோ உங்களுக்கு சேவை செய்பவர்களுக்கோ எவ்வித அதிகாரமும் இல்லை அவ்வாறு செயற்பட முயலுவீர்களானால் உங்களுக்கு எதிராக களத்தில் இறங்குவதற்கும் நாங்கள் தயராகவே இருக்கின்றோம் என்பதனையும் கூறிக் கொள்கின்றோம்.


எனவே புத்தளத்து அரசியல் பரப்பில் விதை நட்டியவர்கள் புத்தளம் மக்கள் அதனை அருவடை செய்பவர்களும் புத்தளம் மக்களே என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.




No comments

note