தாருஸ்ஸலாம் தொண்டர் அணியினருக்கான 3R கழிவு முகாமைத்துவ செயல்முறை பயிற்சி
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
புத்தளம் தாருஸ்ஸலாம் மஸ்ஜிதின் ஏற்பாட்டில் தாருஸ்ஸலாம் தொண்டர் அணியினருக்கான 3R கழிவு முகாமைத்துவம் பற்றிய செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு புத்தளம் நகர சபையின் சுகாதார பொறுப்பதிகாரி திரு ஜிப்ரி தலைமையில் புத்தளம் மணல்குன்று பகுதியில் இருக்கும் குப்பைகள் கொட்டும் இடத்தில் இடம்பெற்றது.
புத்தளத்தில் உள்ள மஸ்ஜிதுகளின் வரலாற்றில் பல்வேறு முன்மாதிரி வேலைத் திட்டங்களை புத்தளம் தாருஸ்ஸலாம் மஸ்ஜித் செயல்படுத்தி வருகின்றது.
அதன் அடிப்படையில் மற்றுமோர் வேலைத்திட்டமாக தற்போது புத்தளத்தில் தற்காலத்தில் கழிவு முகாமைத்துவம் என்பது பாரிய பிரச்சினையாக உள்ளதை கவனத்தில் கொண்டு இந்த 3R கழிவு முகாமைத்துவம் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற சரியான வழிகாட்டல் இல்லாமல் முறையற்ற விதத்தில் கழிகள் அகற்றப்பட்டு வருகிறது. இதனை சமூக பங்களிப்புடன் நிவர்த்தி செய்து சமூக மாற்றமாக ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் தாருஸ்ஸலாம் தொண்டர் அணியினர் உறுவாக்கப்பட்டு அவர்களுக்கான செயல்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக புத்தளத்திலேயே ஒரு முன்மாதிரி 3R கழிவு முகாமைத்துவ செயற்பாடு தாருஸ்ஸலாம் மஸ்ஜித் மஹல்லா மூலம் உருவாக்கப்படும் என தாருஸ்ஸலாம் மஸ்ஜித் தலைவர் எம்.டீ. ரூஹுல் ஹக் தெரிவித்தார்.
No comments