2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க - முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க
(நமது நிருபர்)
2024ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவிக்கின்றார்.
அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதித் தேர்தலில் களமிளக்குவது காலத்தின் தேவை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஜனாதிபதித் தேர்தலில் பலர் போட்டியிட எதிர்பார்க்கின்ற போதிலும், நாடு கடும் நெருக்கடியை சந்தித்த தருணத்தில் நாட்டை பொறுப்பேற்று கடமையை நிறைவேற்றும் சிலரே இருக்கின்றார்கள் எனவும் அவர் கூறினார்.
நாடு நெருக்கடியிலிருந்து மீண்டும் பாதுகாப்பான நிலைக்கு வர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே காரணம் எனவும், அவரை பொது வேட்பாளராக களமிறக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவிக்கின்றார்.
No comments