JobVibe.lk - Sri Lanka Job Portal

வயம்பயில் நடைபெற்ற கராத்தே போட்டியில் புத்தளம் மாணவர்களுக்கு 02 தங்கள் 02 வெள்ளி பதக்கங்கள்

(எம்.எச்.எம் சியாஜ்)

வயம்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற (17) கராத்தே சுற்றுப் போட்டியில் புத்தளத்தை சேர்ந்த  மூன்று  மாணவர்கள் இரண்டு தங்கம் இரண்டு வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார்கள். 


21 வயதிற்கு உட்பட்ட காத்தா மற்றும் குமித்தே ஆகிய இரு போட்டிகளிலும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர்  ஏ.எம்.அஸாம் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை பெற்றுள்ளார்.


14 வயதிற்குற்பட்ட குமித்தே போட்டியில் மதுரங்குளி எக்ஸெலன்ஸ் ஆங்கில பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் யூ. தாமீர் தங்கப் பதக்கத்தையும், புத்தளம் காஸிம் சிட்டி பாடசாலை மாணவன் மாஷின் அஹ்மத், 15 வயதிற்குட்பட்ட குமித்தே போட்டியில்                                  வெள்ளிப் பதக்கத்தையும்  வென்றுள்ளனர்.


இந்த மாணவர்களை "டபில்யூ.எஸ்.கே.ஏ." கழகத்தின் கராத்தே பிரதான போதனாசிரியரான சிஹான் எம். பைரோஸ்  பயிற்றுவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال