பு/அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராகிறார் எஸ்.எச்.தமீம் அன்ஸார்.
புத்தளம் தெற்கு கோட்டக் கல்வி அலுவலகத்திற்குற்பட்ட பெருக்குவட்டான் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எஸ்.எச்.தமீம் அன்ஸார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கனமூலையை பிறப்பிடமாகவும், கொத்தாந்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட அதிபர் எஸ்.எச்.தமீம் அன்ஸார் அவர்கள் பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலம், பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை), கு/ சியம்பலாகஸ்கொடுவ தேசிய பாடசாலை, புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றுள்ளார்.
1990.01.01 ஆம் திகதி ஆசிரியர் நியமத்தை பெற்ற அவர் பு/சமீரகம முஸ்லிம் வித்தியாலயம், பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயம், பு/கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயம், ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராக கடமை புரிந்துள்ளார்.
2011.10.06 ஆம் திகதி பெருக்குவட்டான் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலத்தில் இணைந்து கொண்ட அவர் அப்பாடசாலையின் பிரதி அதிபராக கடமை புரிந்து வந்துள்ளதோடு, கடந்த 27 ஆம் திகதி பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். ராசிக் அவர்கள் ஓய்வு பெற்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் ஆலோசனைக்கிணங்க 2023.10.28 ஆம் திகதி அப்பாடசாலையின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments