Breaking News

மதுரங்குளி தும்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 15 வருட பூர்த்தியும், புதிய ஏற்றுமதிக்கானபொதி செய்யும் நிலையம் ஆரம்ப நிகழ்வும்

மதுரங்குளி தும்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 15 வருட பூர்த்தியும், புதிய  ஏற்றுமதிக்கான பொதி செய்யும் நிலையம் ஆரம்ப நிகழ்வு இன்று (28)மதுரங்குளி தும்பு உற்பத்தியாளர்  சங்கத்தின் தலைவர் ஏ.ம்.நஸ்மி தலைமையில் இடம்பெற்றது.


இலங்கையின் அந்நிய செலவாணியை பெற்றுத் தரும் ஏற்றுமதி உற்பத்திகளில் மிகவும் முக்கியமான இடத்தில் இருக்கும் ஒரு  தொழிலே இந்த தும்பு உற்பத்தி தொழிலாகும். 


உலக சந்தையில் மிகவும் தரம் வாய்ந்த தும்பு ஆக திகழ்வது மதுரங்குளி பிரதேச தும்பு என்பதும் பலரும் அறியாத உண்மை. 


இவ்வாறான உற்பய்தியாளர்களின்  ஒன்றினைந்த சங்கமாக  திகழ்வதுதான்  விருதோடையை மையமாக கொண்ட  "coco Lanka Fiber Industrial Society" ஆகும். 


இது கடந்த 2008ஆம் வருடம் ஆரம்ப பகுதியில் மர்ஹூம் M.N.M.சலாஹுத்தீன்  அவர்களின்  முயற்சியில் அவரையே தலைவராகக் கொண்டு ,அரச அனுமதியுடன் (Registred) ஆரம்பிக்கப்பட்ட ஒரே சங்கமாகும்.


கடந்த காலங்களில் ஏற்பட்ட பல பொருளாதார நெருக்கடிகளால் இந்த தொழில் மிகவும் நஷ்டமான நிலைக்கு தள்ளப்பட்டது. பாரிய போராட்டங்களுக்கு மத்தியில் இந்த உற்பத்தியாளர்கள் தமது தொழிலை கொண்டு செல்லும் அதே நேரம்  இவர்களின்  உற்பத்தியை கொள்வனவு செய்யும் வெளி பிரதேச ஏற்றுமதியாளர்கள் இவர்களை நசுக்கும் விதத்திலேயே  விலை கொடுப்பதுதான்  இவர்களை வேதனை படுத்தி வந்தது. 


இருப்பினும் இப்போதைய  தலைவர் ஏ.எம் நஸ்மி அவர்களின் நிர்வாக திறனால்  அவர்கள் ஒன்றிணைந்து சங்கத்திற்காக ஒரு இயந்திரம்  மற்றும் களஞ்சியாலை என்பனவற்றை பெற்று, இன்று முதல் அவர்கள்  ஏற்றுமதிக்கு தயாரன நிலைக்கு அவர்களின்  உறபத்திகளுக்கு உருவாக்கம் கொடுத்துள்ளார்கள். 


இன்று முதல் அவர்கள் உற்பத்திகளை  அவர்களாக ஏற்றுமதி சந்தைக்கு  கொண்டு செல்லும் பணியை 28.05.2023 இன்று தலைவர் மற்றும் நிர்வாக, அங்கத்துவ நண்பர்களோடு ஆரம்பம் செய்துள்ளார்கள். 


இங்கு உரையாற்றிய தலைவர் இந்த நிகழ்வை சிறப்பிக்க உதவிய அனைவருக்கும் நன்றி சொன்னதோடு இனி வரும் காலங்களில் எமது தும்பு உற்பத்திகளுக்கு  சந்தையில்  நல்ல விலை எடுத்துக் கொடுப்பதாகவும்,இவர்களோடு கை கோர்க்க இன்னும்  இரண்டு முதலீட்டாளர்கள்  தயாராக இருப்பதாகவும் தெரிவித்த தோடு,  மேலும் ஏற்றுமதி துறையில்  உள்ள சகோதரர்களையும்  தம்மோடு இணைந்து  பயணிக்க வருமாறும்  அழைப்பு விடுத்தார். 


இன்றைய நிகழ்வு முன்னாள் தலைவர்  மர்ஹூம் எம்.என்.எம். சலாஹுத்தீன்  அவர்களுக்காக பிராத்தனையுடன்  ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எமது பகுதியின் உற்பத்தியாளர்களின்  வெற்றிக்காக  மதுரங்குளி மீடியாவாகிய நாமும் பிராத்திக்கின்றோம்.












No comments