Breaking News

பெருக்குவட்டானைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ஓய்வு பெற்ற அஷ்ஷெய்க் எம்.எல். தாஹீர் லெப்பை கௌரவிக்கப்பட்டார்.

பெருக்குவட்டானை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு பலகத்துறையை  வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எல். தாஹீர் லெப்பை கௌரவிக்கப்பட்டார்.


நீர்கொழும்பு போருந்தொட்டை பிரதேசத்தில் இயங்கிவரும் ஹிமா பெண்கள் நலன் புரிச் சங்கம் நேற்று (28) அஹதியா பாடசாலைகளில் கல்வி கற்பித்த மற்றும் கற்பித்து வரும் ஆசிரியர்களை கௌரவித்தல் , மற்றும் சமூக சேவையாளர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நீர்கொழும்பு Maple Leaf ஹோட்டலில் இடம்பெற்றது.


இந்நிகழ்வின் போது முன்னாள் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எல். தாஹீர் லெப்பை அவர்கள் அவருடைய சேவையை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


இவர் நீர்கொழும்பு பலகத்துறை ஜும்ஆ பள்ளிவாசலின் முன்னாள் பேஷ் இமாமும், நீர்கொழும்பு பலகத்துறை அல் - பலாஹ் மத்திய கல்லூரி போருதொட்டை முன்னாள் அதிபரும், அமெரிக்கா வதிவிடத்தைப் பெற்ற இவர்அமெரிக்கா, நிவ்ஜேஸி மாநிலம், எடிசன் மாநகர இலங்கை பல்வாசல் பேஷ் இமாம்  என்பதும் குறிப்பிடத்தக்கது.








No comments

note