பறகஹதெனிய மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) பழைய மாணவர்களால் கல்லூரிக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு!.
பறகஹதெனிய மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை) யின் பழைய மாணவர்களாகிய க.பொ.த (சா/த) 1995 வகுப்பு மாணவர்களின் பூரண பங்களிப்பில் பாவனைக்குதவாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த வகுப்பறை தளபாடங்களை புனரமைத்து பாடசாலைக்கு கையளிக்கும் நிகழ்வு 04/01/2023 பாடசாலையில் நடைபெற்றது.
புதிதாகத் தயாரிப்பதானால் ஏறத்தாழ ரூ.15,00,000/- ரூபாய்க்கு மேல் செலவாகக்கூடிய இத்தளபாடங்களை ரூ.2,50,000/- செலவில் புனரமைத்து பாடசாலைக்கு கையளித்த O/L 95 வகுப்புக்கு பாடசாலை பழைய மாணவர் சங்கம் தன் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களனைவரதும் பொருளாதாரத்திற்கும்,ஆரோக்கியத்திற்கும் இறைவனின் அருளை பிரார்த்திக்கிறது.
O/L '95 வகுப்பு சார்பில் சகோதரர்களான பர்ஸாத், கமால் ரைஸ், இர்பான், பஸ்லான், ரஸீம் ஆகியோர் தளபாடங்களை பாவனைக்காக கல்லூரியின் அதிபர் நஸார் அவர்களிடம் கையளித்தனர். பழைய மாணவர் சங்கம் சார்பாக ஹுமாம் கலந்து கொண்டார்.
தரம் 7 வகுப்பறைகளுக்கு கையளிக்கப்பட்ட இத்தளபாடங்களை கையளிக்கும் நிகழ்வில் அவ்வகுப்பறைகளின் சார்பில் ஆசிரியை சுலோச்சனா ஆசிரியர் பைஸர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நற்பணியை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு ஏனைய வகுப்புகளைச் சேர்ந்த பழைய மாணவர்களும் இவ்வாறான அறப்பணிகளில் பழைய மாணவர் சங்கத்தோடு கை கோர்த்து ஒன்றிணைந்து, அர்ப்பணிப்புடன் செயலாற்றி, நம் கல்வித்தாய்க்கு கைமாறு செய்ய திடசங்கற்பம் பூண வேண்டும் என்ற வேண்டுகோளை பழைய மாணவர் சங்கம் அன்புடன் முன்வைக்கிறது...
இணைவோம்..!
வெல்வோம்..!!
No comments