JobVibe.lk - Sri Lanka Job Portal

அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக அனீஸ் நியமனம்

(சர்ஜுன் லாபீர்)

அம்பாறை மாவட்ட செயலகத்தில் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய டீ.மோகனகுமார் அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்றதை அடுத்து மாவட்ட செயலகத்தில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றும் எச்.பீ அனீஸ் அவர்கள் திட்டமிடல் பணிப்பாளராக  இன்று(2) அம்பாறை மாவட்ட செயலாளரினால் இப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


அட்டாளைச்சேனையை சேர்ந்த இவர் லகுகல,அம்பாறை,பொத்துவில் போன்ற பிரதேச செயலகங்களில் கடமையாற்றியதுடன் இவர் எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் நேர்மையான ஒரு அதிகாரியாவார்.


சிறந்த ஆளுமை கொண்ட இவர் அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார் என்பதோடு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டுத் துறையில் விசேட பட்டம் பெற்றதோடு முதுநிலை பட்டத்தையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال