Breaking News

அம்பாறை மாவட்டத்திலுள்ள விளையாட்டுக்கழகங்களை பலப்படுத்த ஹரீஸ் எம்.பியினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.

நூருல் ஹுதா உமர்

தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிராந்திய மட்டத்தில் பல துறைகளிலும் பிரகாசிக்கும் அம்பாறை மாவட்ட பாலமுனை ட்ரை ஸ்டார் விளையாட்டுக்கழகம், இறக்காமம் விர்லியன்ட் விளையாட்டுக்கழகம், சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த றோயல் லைன்ஸ் விளையாட்டு கழகம் மற்றும் ஸ்பேற்றேன்ஸ் விளையாட்டு கழகம், ஒலுவில் இலவன் ஸ்டார் விளையாட்டு கழகம் ஆகிய விளையாட்டுக்கழகங்களுக்கு அக்கழகத்தின் உதைபந்தாட்ட அணியை பலப்படுத்த முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரிஸின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் உதைப்பந்தாட்ட காலணிகள், பந்துகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை கழக பிரதானிகளின் தலைமையில் அந்தந்த பிரதேசங்களில் இடம்பெற்றது.


அம்பாறை மாவட்ட கால்பந்து விளையாட்டு துறையை மேம்படுத்த முன்னெடுக்கப்பட்டு பல்வேறு பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கும் வழங்கப்பட்டு வரும் தொடர் வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரிஸ் இந்த உபகாரணங்களை நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.


இந்நிகழ்வுகளில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.எம்.எம்.ஹனீபா, உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்யோக செயலாளர் நௌபர் ஏ பாவா, பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் ஏ.ஜி.எம். அன்வர் நௌசாத், இளைஞர் காங்கிரஸ் முக்கியஸ்தர், பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள்,  விளையாட்டுக் கழக நிர்வாகிகள், பிராந்திய விளையாட்டு வீரர்கள்  உட்பட பலரும் கலந்து கொண்டனர்.









No comments

note