கடையாமோட்டை தேசிய பாடசாலை மாணவர்கள் க.பொ.த. (உ/த) பரீட்சையில் இம்முறை வரலாற்று சாதனை!
✍️ சென்றவருட பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவின் வெற்றுப் புள்ளிக்கிணங்க 4 மருத்துவம் உட்பட ஏனைய துறைகளில் 54 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாகலாம் என எதிர்பார்ப்பு!.
க.பொ.த.உயர் தர பரீட்சையில் தற்போது வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் விஞ்ஞானம், கணிதம்,வர்த்தகம், கலை ஆகிய பிரிவுகளில் மிகச்சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகம் நுழையும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
அந்த வகையில் விஞ்ஞானப் பிரிவில் நான்கு மாணவர்கள் வைத்திய துறைக்கு தெரிவாகியுள்ளதோடு, அதிலும் குறிப்பாக ஒரு மாணவி 3A சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் ஐந்தாம் இடத்தை பெற்றிருப்பதுடன், விஞ்ஞான துறையில் மூன்று மாணவர்கள் எல்லாப் பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.
சென்ற வருட பல்கலைக்கழக மாணிய ஆணைக் குழுவின் வெற்றுப்புள்ளிக்கிணங்க நான்கு மருத்துவம் உட்பட சகல துறைகளிலும் 54 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்படலாம் என எதிர்பார்ப்பதாக பாடசாலையின் முதலவர் எம்.எச்.எம். தௌபீக் தெரிவித்தார்.
அந்த வகையில் நான்கு மருத்துவம் உட்பட மேலும் பதினேழு மாணவர்கள் விஞ்ஞான துறையிலும், நான்கு மாணவர்கள் கணித துறையிலும், பதிமூன்ன்று மாணவர்கள் முகாமைத்துவ பிரிவிலும், ஏழு மாணவர்கள் வர்த்தக துறையிலும்., ஒன்பது மாணவர்கள் கலைத்துறையிலும் தெரிவாக உள்ளனர்.
மேலும் இப்பெறுபேறுகளை பெற்றுக் கொடுத்த மாணவர்களையும், பெறுபேறுகளை பெறுவதற்கு வழிசமைத்த அதிபர், ஆசிரியர்களை கல்வி மேம்பாட்டுக் குழு, பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம், இவர்களை தனிப்பட்ட ரீதியாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
KMCC (NS) MEDIA UNIT
சிறந்த பெறுபேறுக்காக அயராது உழைத்த அதிபர் உட்பட அத்தனை ஆசிரியர்களுக்கும், கல்வி மேம்பாட்டுக் குழு, பாடசாலை அபிவிருத்தி குழு, பழைய மாணவர் சங்கம், பெற்றோர்கள் மற்றும் சாதனை படைத்த மாணவர்கள் அனைவருக்கும் மதுரங்குளி மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
No comments