Breaking News

நற்பிட்டிமுனை பிரதேச சமூக நல விடயங்கள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்.

நூருள் ஹுதா உமர்

நற்பிட்டிமுனை பிரதேச சமூக நல விடயங்கள் தொடர்பில் ஆராயும் நற்பிட்டிமுனை சிரேஷ்ட பிரஜைகள் பேரவைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம். எம். ஹரீஸ் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினரின் செயலகத்தில் இன்று (28) நடைபெற்றது.
முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த கலந்துரையாடலில் நற்பிட்டிமுனை பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள், பிரதேச எல்லை பிரச்சினைகள், பிராந்தியத்தில் தலைதூக்கியுள்ள போதை பொருட்கள் ஒழிப்பு விவகாரம், நற்பிட்டிமுனையில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆழமாக கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் நற்பிட்டிமுனை சிரேஷ்ட பிரஜைகள் பேரவை சார்பில் அமைப்பின் ஆலோசகர்களான சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எம்.எச்.எம். நளீர், மௌலவி யூ. எல்.ஏ. கபூர், அமைப்பின் தவிசாளர் ஏ.ஏ. கபூர், தலைவர் மௌலவி ஏ.எல். நசீர் கனி, பொதுச்செயலாளர் எம்.எம். றியாஸ், நிதி செயலாளர் ஐ.எல். ரவூப்தீன், பொருளாளர் யூ. எல். தௌஃபீக், பிரதி தவிசாளர் எம்.எல்.ஏ. கையூம், பிரதித்தலைவர் எம்.எல். பதியுதீன், உப தலைவர் மௌலவி எம்.டீ. ஏ. முனாப், பிரதி செயலாளர் ஏ.எஸ்.எம். ஜௌபர், மெட்ரோ லீடர் பிரதம ஆசிரியர் ஏ.எஸ்.எம். முஜாஹித், பேச்சாளர் மௌலவி ஏ.எம். சாலித்தின், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஆகிய பலரும் கலந்து கொண்டனர்.








No comments

note