Breaking News

ஆராய்ச்சிகளின் முடிவுகள் பல்கலைக்கழகத்தின் தரத்தினை நிர்ணயம் செய்யும் : உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவிப்பு

(நூருள் ஹுதா உமர்)

ஆய்வு அறிக்கையின் நோக்கம் தனிப்பட்ட மதிப்புகளுடன் தொடர்புடைய ஆய்வின் முக்கியத்துவத்தை மதிப்பிடுவதற்கு பாடத்துக்கு உதவியாகவும், அறிக்கையானது ஆய்வின் உடனடி நோக்கத்தை மட்டுமல்ல, எந்த பெரிய இறுதி நோக்கத்தையும் உள்ளடக்கியிருக்க  வேண்டும். ஆராய்ச்சிகளின் முடிவுகள் பிரசுரிக்கப்படும் போது ஆராய்ச்சியாளர்களின் தரமும், பல்கலைக்கழகத்தின் தரமும் உயரும் என தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.


10 ஆவது சர்வதேச ஆய்வரங்கு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (10) புதன்கிழமை நடைபெற்றது.


வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் தலைவர் எஸ்.சபீனா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில்,


தேவையான மற்றும் நியாயமான ஆராய்ச்சி மூலோபாயமாக, ஏமாற்றுதல் அல்லது  தகவல்களைத்தடுத்து நிறுத்துதல் போன்ற ஆய்வில் ஈடுபட்டிருந்தால், ஆய்வறிக்கையின் நோக்கம் குறைந்தபட்சம் சாத்தியமான ஏமாற்று அல்லது தகவலைதடுத்து நிறுத்தும் வகையில் எழுதப்பட வேண்டும் என தெளிவுபடுத்தினார்.


ஆய்வின் நோக்கம் ஆராய்ச்சியின் அறிவியல் நோக்கம் பற்றிய தெளிவான மற்றும் துல்லியமான அறிக்கையாக இருக்க வேண்டும்.


நீங்கள் கல்வி ஆராய்ச்சி செய்யும் போது, உங்கள் நோக்கத்தை வரையறுப்பது முக்கியம்.  ஒரு நோக்க அறிக்கை வரும்போது,  இது உங்கள் தரமான அல்லது அளவு ஆராய்ச்சியின் நோக்கத்தை தெளிவாக வரவேற்கிறது தனிப்பட்ட மற்றும் உலக எடுத்துக்காட்டுகள் மூலம் ஆராய்ச்சி நோக்க அறிக்கையில் விவரங்களை பெற வேண்டும்.


பொதுவாக ஆராய்ச்சி புதிய தேடல்களை உருவாக்கப்பட ஏற்கனவே இருக்கிற ஆராய்ச்சிகளுக்கு மேலதிகமாக அறிவு சார்ந்த தகவல்களைக் கொண்டு சேர்த்தல் ஏற்கனவே செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளை மீள் கேள்விக்கு உட்படுத்தல் வேண்டும்.ஏற்கனவே செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் உள்ள வெற்றிடங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.  


ஆராய்ச்சிகளின் நோக்கம் ஆராய்ச்சி செய்வதற்குரிய ஆர்வம் இருக்க வேண்டும் மற்றும் கடின உழைப்பும், ஆர்வமாக ஈடுபடுகிறோமோ உற்சாகமாக அதற்குரிய ஆராய்ச்சி முடிவுகள் ஒரு உண்மையானதும் உறுதியானதுமாக வரும்.


நான் அடிக்கடி குறிப்பிடுவது போல் ஆராய்ச்சி என்பது கற்பித்தலில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும்,  கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளோடு ஆராய்ச்சியும் ஒரு கல்வியாளர்களின் முக்கிய வகிபாகமாகும். அதாவது கற்பித்தல் துறையில் நிலைத்து நிற்பதற்கு ஆராய்ச்சியில் தொடர்ச்சியாக ஈடுபடவேண்டும் மற்றும் கோட்பாடு சம்பந்தமான கல்வியுடன் சேர்த்து ஆராய்ச்சி செய்வதும் அவசியமாகும்.


ஆராய்ச்சியில் முழு ஈடுபாட்டுடன் தொடர்ச்சியாக செய்ய வேண்டும் ஆராய்ச்சி செய்வதற்கு குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் நோக்கத்தோடு ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்.


ஆராய்ச்சியில் ஈடுபடுவது ஏதாவது ஒரு  பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்தோடு இருக்க வேண்டும். தொடர்ச்சியான இலக்கண ஆய்வுகளின் மூலம் ஆராய்ச்சிக்குரிய பிரச்சினையை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.


இலக்கணம் ஆராய்வு  செய்வதற்கான ஒரு ஆராய்ச்சியாளர் அதிகமாக வாசிப்பில் ஈடுபட வேண்டுமென்றும், அத்துடன் இலக்கணம் ஆய்வு செய்வதன் மூலம் ஏற்கனவே செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகளை அறிவதோடு அதில் விடப்பட்ட  கண்டறியப்படாத விடயங்களை அறிய வேண்டும்.


ஆராய்ச்சியாளர்கள் எப்போதும் ஒரு குறியவட்டத்துக்குள் ஆராய்ச்சி செய்வதைவிடுத்து, வெவ்வேறான துறைகளி்லுள்ள ஒருங்கிணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்.


சமூக விஞ்ஞான துறை மற்றும் மனிதப் பண்பியல் துறையின் முக்கியத்துவத்தை சிலாகித்துப் பேசியத்துடன் அத்துறை தொடர்பான ஆய்வுகள் மேலும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தினையும் எடுத்துறைத்தார்.


எனது துறை சமூக விஞ்ஞானமாக இருந்தபோதிலும்  கோவிட்-19 காலப்பகுதியில்  இது சம்மந்தமாக ஆராய்ச்சியில்  ஈடுபட்டு,  கோவிட்-19 தாக்கம் எவ்வாறு சமூகம், பொருளாதாரம், கல்வி,அரசியல் ரீதியிலான தாக்கத்தினை உண்டு பண்ணியது என்பதனை கண்டறிய முடிந்தது என்றும் தெரிவித்தார்.


சமூக அறிவியல் மற்றும் மனிதப் பண்பியல்துறை ஏனைய துறைகளை ஊடறுத்து செல்லும் விதம் குறித்தும், சமூக அறிவியல் ஆய்வுப் பரப்பினை விஸ்தரிப்பதனுடாக சமகால நெருக்கடிகளை கையாளும் வழிவகைகள் குறித்தும் அவரது உரை கவனம் செலுத்தியது.


ஆராய்ச்சிகளின் முடிவுகள் பிரசுரிக்கப்படும் போது ஆராய்ச்சியாளர்களின் தரமும், பல்கலைக்கழகத்தின் தரமும் உயர்ரும். என்று தெரிவித்தார்.


சிரேஷ்ட ஆராய்ச்சியாளர்கள், இளம் ஆராய்ச்சியாளர்களை இணைத்து ஆராய்ச்சியில் ஈடுபடுவதன் மூலம் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு சிறந்த வழிகாட்டல் வழங்க வேண்டும்.


ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கு அண்மையில் உள்ள தொழில் மையங்கள்,  நிறுவனங்கள், துறை சார்ந்த அமைப்புகள் ஒருங்கிணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடுதல் வேண்டும்.


இது போன்ற நிகழ்வுகள் ஆராய்ச்சியாளர்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பமாகும், ஆகையால் ஆராய்ச்சியாளர்கள் சிறந்த முறையில் தங்களது ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த களமாகும்.


இந்நிகழ்வின் சிறப்பு பேச்சாளராக இந்தியாவின் கல்கத்தா வெஸ்ட் வெண்கல் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ துறைத்தலைவர் பேராசிரியர் கலாநிதி பிராணம் டார் தொழில்நுட்பத்தினுடாக சிறப்புரையாற்றினார்.


இந்நிகழ்வின் இறுதியில் "ஆய்வு சஞ்சிகை நூலின் முதல் பிரதி உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கருக்கு வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி கலாநிதி எஸ்.சபீனா ஹசனால் வழங்கி வைக்கப்பட்டது.


நூலின் பிரதிகள் பதிவாளர், பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோர்களுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரினால் வழங்கி வைக்கப்பட்டது.








No comments

note